செய்திகள்

என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: ஏ. ஆர். ரஹ்மான்

தன் முன்னாள் மனைவி குறித்து ஏ. ஆர். ரஹ்மான் பேசியுள்ளார்....

DIN

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இறுதியாக வெளியான, ‘உசுரே நீதான்’, ’என்னை இழுக்குதடி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

தற்போது, மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிலும், ’விண்வெளி நாயகா’ என்கிற இசை வசனம் பெரிதாகக் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ. ஆர். ரஹ்மானிடம், ‘மன்னிப்பாயா? என யாரிடமாவது நீங்கள் கேட்க வேண்டுமென்றால், அது யார்? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ரஹ்மான், “எல்லாரிடமும்தான் கேட்க வேண்டும். முக்கியமாக, குடும்பத்தினரிடம். என் மகன், மகள்கள், என் முன்னாள் மனைவி என அனைவரிடமும் மன்னிப்பாயா எனக் கேட்க வேண்டும்.” என்றார்.

ஏ. ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு தன் கணவரைப் பிரிவதாகக் கடந்தாண்டு தெரிவித்தார். தற்போது, ரஹ்மான் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட்டு இருவரும் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல்சாா் உயரடுக்கு பாதுகாப்புப் படை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சத்துணவு ஊழியா் வீட்டில் நகை திருடியவா் கைது

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

SCROLL FOR NEXT