செய்திகள்

மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு!

ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி புதிய மனு...

DIN

நடிகர் ரவி மோகன் மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி மனு அளித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இணை விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து வழங்கப்படாத நிலையில் ரவி மோகன் பாடகி கேனிஷாவுடன் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் எழுந்த விமர்சனங்களுக்கு ரவி மோகன் 4 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், “ என் முன்னாள் மனைவியும் அவரின் குடும்பத்தாரும் என்னைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். என் சுதந்திரத்தைப் பறித்து பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படுத்தினர்” என தன் தரப்பு நியாயங்களைக் கூறியிருந்தார்.

தொடர்ந்து, நேற்று (மே. 20) ஆர்த்தி ரவி 5 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், எங்களைப் பிரித்தது மூன்றாவது நபர்தான் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், விவகாரத்து கோரிய வழக்கில் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதில், ரவி மோகன் ஆர்த்தியுடன் வாழ விருப்பமில்லை என விவகாரத்துக் கோரியும், மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தியும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவைப் பெற்ற நீதிபதி, நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT