முகப்பு
செய்திகள்

ஒத்திகை பார்க்காமல் படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டேன்: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பு ஒத்திகை குறித்து பேசியுள்ளார்...

Updated On : 22 மே, 2025 at 4:16 PM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு படத்திற்கு நடிப்பு ஒத்திகை பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கமல்ஹாசனிடம், “இதுவரை 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டீர்கள். இப்போதும் ஒத்திகை (ரிகர்சல்) பார்த்துவிட்டுதான் நடிக்கப் போவீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

Advertisement

அதற்கு கமல்ஹாசன், “ரிகர்சல் பார்க்காமல் எந்தப் படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நடிப்பு பயிற்சியில்தான் இருப்பேன். கேமராவுக்கு முன்பான நடிப்பைவிட இதுவே எனக்கு பிடிக்கும். ஒத்திகை கண்டிப்பாகத் தேவை. நான் ஒத்திகை செய்யாமலே நடித்துவிடுவேன் என யாராவது சொன்னால், அது தற்பெருமைகூட அல்ல; சில்லறைத்தனம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.