சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் 500 நாள்களைக் கடந்துள்ளது.
சிங்கப் பெண்ணெ தொடர் ஆரம்பிக்கப்பட்ட சில நாள்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 2023 அக்டோபர் 9ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிராமத்தில் பிறந்த விவசாயியின் மகள், ஆட்சியராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணே கலைமானே தொடரை இயக்கிய தனுஷ், சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார். மேலும் இந்தத் தொடரில் அமல்ஜித், தர்ஷக் கெளடா, விஜே பவித்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.
சிங்கப் பெண்ணே தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில், இத்தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது. இதற்கு சின்ன திரை ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஹார்ட் பீட் - 2 வெப் தொடர் வெளியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.