நடிகர் ஜாக்கி சான் ரூ.3,400 கோடி மதிப்புள்ள தன் சொத்துகளைத் தானமாக வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற நடிகர்களில் ஜாக்கி சானுக்கு தனித்துவமான இடமுண்டு. வாழ்க்கையைப் பேசும் படங்கள் உலகளவில் தங்களின் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தபோது புரூஸ் லீ தன் ஆக்சன் திரைப்படங்களால் பல கோடி ரசிகர்களுக்கு இப்படியும் படங்கள் எடுக்கலாம் என்பதை உணர்த்தினார்.
அவரைத் தொடர்ந்து சினிமாவுக்கு வந்தவர் ஜாக்கி சான். ஹாங் காங்கைச் சேர்ந்த ஜாக்கி தன் முக பாவனைகளால் சண்டைக்காட்சிகளில் நகைச்சுவையை இணைத்து உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கினார்.
அப்படி, 80-களின் துவக்கத்திலிருந்து ஜாக்கியின் திரைப்படங்கள் கவனத்திற்கு வரப்பட்டு பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின.
தி டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி, டிராகன் ஃபிஸ்ட், தி மித், கராத்தே கிட் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இன்றும் நீடிக்கின்றன. தற்போது, 71 வயதாகும் ஜாக்கி சான் கராத்தே கிட் - 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஜாக்கி சான் தன்னுடைய அறக்கட்டளை (Jackie Chan Charitable Foundation) வழியாக ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்காக ரூ. 3400 கோடி சொத்தைத் தானமாகக் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முன்னர் தன் அறக்கட்டளை குறித்து பேசிய ஜாக்கி, இளம் வயதில் வறுமையில் வாடியதாகவும் நான் பட்ட கஷ்டத்தைப் பிறர் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரெட்ரோ ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.