லட்சுமி ராமகிருஷ்ணன் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

சொல்வதெல்லாம் உண்மைக்கு போட்டியாக மற்றொரு நிகழ்ச்சி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்குப் போட்டியாக மற்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்குப் போட்டியாக மற்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதனால், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குப் போட்டியாகவே இந்நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், 2011 முதல் 2018 வரை 7 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நான்கு சீசன்களாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் முதன் சீசனை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார்.

இரண்டாவது முதல் நான்காவது சீசன் வரை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இடையிடையே நடிகை சுதா சந்திரனும் இந்த நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை மையமாக வைத்து அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்க உதவும் வகையில் ஒளிபரப்பானது.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பலரின் வாழ்க்கைக்கு தீர்வு கொடுத்து உதவினாலும், சமூக வலைதளங்களிலும், திரைப்படங்களிலும் கடும் கேலிக்குள்ளானது. இந்நிகழ்ச்சியை பகடி செய்யும் விதமாக ஏராளமான காட்சிகள் படங்களில் இடம்பெற்றன.

உண்மை வெல்லும்

இந்நிலையில், இதேபோன்றதொரு நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. உண்மை வெல்லும் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, ஜுன் 2ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மகள்களின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT