செய்திகள்

ரெட்ரோ ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரெட்ரோ ஓடிடி வெளியீடு குறித்து...

DIN

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 2டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

நடிகர் சூர்யா சினிமா வாழ்க்கையில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படமாக ரெட்ரோ இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

காதல், நகைச்சுவை, சண்டை என கமர்சியல் திரைப்படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பும் கனிமா பாடலும் மிகவும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகளில் மே 31 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பவன் கல்யாண் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

போலீஸ் டாக்டர்... ஜனனி அசோக் குமார்!

வெண்ணிலவே... வெண்ணிலவே... கஜோல்!

நீயாக இரு... ஐஸ்வர்யா ராஜேஷ்!

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT