செய்திகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆல்யா மானசாவின் புதிய தொடர்!

ஆல்யா மானசாவின் புதிய தொடர் குறித்து...

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ஆல்யா மானசாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் சின்ன திரைக்கு வந்த ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து மக்கள் மனங்களை வென்றார். இத்தொடரின் நாயகனாக சஞ்ஜீவ் நடித்திருந்தார்.

இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த ஆல்யா - சஞ்ஜீவ், நிஜத்திலும் காதலா்களாகி கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராஜா ராணி பாகம் 2 மற்றும் இனியா தொடரில் ஆல்யா நடித்திருந்தார். இனியா தொடரில் நடித்தன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் நடிகை ஆல்யா மானசா.

இவரின் கணவர் சஞ்ஜீவ், குளிர், 6 அத்தியாயங்கள், சகாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜா ராணி தொடரின் மூலமே ரசிகர்கள் மத்தில் பிரபலமானார்.

இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காற்றின் மொழி, பிரியமான தோழி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். தற்போது இவர் கயல் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ஆல்யா மானசா இனியா தொடருக்குப் பிறகு எந்த தொடரிலும் நடிக்காத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆல்யா மானசாவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடரில் நடிக்கவுள்ளேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தகவலை உங்களுக்கு பகிர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்யா மானசா நடிக்கவுள்ள புதிய தொடர் குறித்த புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சிங்கப் பெண்ணே தொடரில் இணையும் பூஜிதா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT