ஹொம்பாலே ஃபிலிம்ஸ், ஹிருத்திக் ரோஷன் படங்கள்: எக்ஸ் /ஹொம்பாலே ஃபிலிம்ஸ், ஹிருத்திக் ரோஷன்
செய்திகள்

ஹொம்பாலே ஃபிலிம்ஸுடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன்..!

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் உடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்தது குறித்து...

DIN

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் உடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்ததுள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1, 2, சலார் ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் மாறியுள்ளது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸுடன் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ளத ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக இருக்கும் ஹிருத்திக் ரோஷன் கிரீஷ் 4 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருப்பதை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹொம்பாலே ஃபிலிம்ஸின் அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஹிருத்தி ரோஷன் நடிகராக நடிக்கிறாரா அல்லது இயக்குநராக அறிமுகமாகிறாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து ஹொம்பாலே ஃபிலிம்ஸ் கூறியதாவது:

அவரை மக்கள் கிரேக்க கடவுள் என்பார்கள். நமது இதயங்களை வென்ற, எல்லைகளை நொறுக்கிய குறிப்பிடத்தக்க நடிகர் அவர்! ஹிருத்திக் ரோஷனை பெருமையுடன் ஹொம்பலே ஃபிலிம்ஸுக்கு வரவேற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT