தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமாகிய நடிகை ஜோதிகாவுக்கு சூர்யாவுடன் 2006-இல் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் இருக்கிறார்கள். தற்போது, தியா தனது உயர்கல்வியை மும்பையின் பிரபலமான சர்வதேச பள்ளியில் முடித்துள்ளார்.
இதன் பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது மகளை நினைத்து தானும் தனது பெற்றோரும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார். நடிகர் சூர்யாவும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
சமீபத்தில் தியா தனது பள்ளியில் நடக்கும் போட்டிக்காக ஆவணப்படம் ஒன்றினை எடுத்து அதற்காக விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தியா நடிகையாக மாறுவாரா அல்லது இயக்குநராக மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் தி கோர், டப்பா கார்டல் இணையத் தொடரும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.200 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.