தக் லைஃப் திரைப்படத்தின் முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் முன்பதிவு நாளை (ஜூன் 1) காலை 8.01 மணிக்கு துவங்கும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனுடன் சிம்பு உள்பட பல நட்சத்திர பட்டாங்களே நடித்துள்ளதால் படத்தின் முதல் நாள் வணிகமே பெரியளவில் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாடகி தீயுடன் என்னை ஒப்பிடக்கூடாது: சின்மயி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.