செய்திகள்

கைதி மலேசிய ரீமேக் படத்தைப் பார்த்த கார்த்தி!

மலேசியாவில் பந்துவான் திரைப்படத்தைப் பார்த்த கார்த்தி...

இணையதளச் செய்திப் பிரிவு

கைதி திரைப்படத்தின் மலாய் மொழி ரீமேக்கை நடிகர் கார்த்தி பார்த்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தி கூட்டணியில் வெளியான கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்தைத் தொடர்ந்தே, விக்ரம் படத்திலிருந்து லோகேஷ் எல்சியூ என்கிற பாணியைக் கொண்டுவந்தார்.

தற்போது, கைதி - 2 திரைப்படத்தின் பணிகளும் துவங்கியுள்ளன. அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, மலேசியாவில் கைதி திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலாய் மொழியில் உருவான இப்படத்திற்கு, ‘பந்துவான்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

ஆரோன் அஸிஸ் நாயகனாக நடிக்க க்ரோல் அஸ்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் மலேசியாவின் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நடிகர் கார்த்தி மலேசியா சென்று அங்கு இப்படத்தின் சிறப்பு திரையிடலை கதை நாயகன் ஆரோனுடன் பார்த்துள்ளார்.

actor karthi watched kaithi movie ramake banduan at malaysia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT