மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்
தேசிய விருது குறித்து பிரகாஷ் ராஜ் பேசியவை...
நடிகர் பிரகாஷ் ராஜ் தேசிய விருதுகளைக் கடுமையாகச் சாடிப் பேசியிருக்கிறார்.
கேரள அரசின் மாநிலத் திரைத்துறை விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கும் சிறந்த நடிகைக்கான விருது ஷம்லா ஹம்சாவுக்கும் அறிவிக்கப்பட்டது. முக்கியமான, மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் 9 விருதுகளை வென்று அசத்தியது.
இந்த விருதுக்குழுவின் தலைவராக பிரகாஷ் ராஜ் செயல்பட்டார். அவரது முடிவுகளின்படியே விருதுகளும் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
Advertisement
Advertisement
விருது அறிவிக்கப்பட்ட நிகழ்வில் பேசிய பிரகாஷ் ராஜ், “இந்த விருதுக்குழுவின் தலைவராகச் செயல்பட என்னை அழைத்து, என் முடிவில் யாரும் தலையிட மாட்டார்கள் என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஃபைல்ஸ் எனப் பெயரிட்ட குப்பைகளுக்கு தேசிய விருதுகள் கொடுக்கப்படும்போது அந்த விருதுகள் மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தகுதியானவை அல்ல என்பதையே காட்டுகிறது.
தேசிய திரைப்பட விருதுகள் சமரசம் செய்யப்பட்டவை என்பதைச் சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது” எனத் தெரிவித்தார். பிரகாஷ் ராஜ்ஜின் இக்கருத்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
prakash raj spokes about national awards
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.