கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் நடிக்கவுள்ளார். இது, ரஜினியின் 173 ஆவது படம்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன்; அன்புடைய ரஜினி எனவும், நாம் பிறந்த கலைமண் வாழ்க எனவும் குறிப்பிட்டு கவிதையொன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படம் வரும் 2027 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி இணைந்து திரைப்படம் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அப்படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி இணையத்தில் அதிக கவனங்களை ஈர்த்து வந்தது.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் கூட்டணியில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.