கமல்ஹாசன் நடிக்கும் கமல் 237 படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தினை சண்டைப் பயிற்சியாளர்களான அன்பு, அறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்.
மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளர்களாக அறிமுகமான அன்பு, அறிவ் சகோதரர்கள் முதல்முறையாக இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்கள்.
தனது முதல் படத்திலேயே நடிகர் கமல்ஹாசனை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.
இன்று கமலின் பிறந்தநாள் என்பதால் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தொழில்நுட்ப குழுவினர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கமல் 237 தொழில்நுட்ப குழுவினர்
ஒளிப்பதிவாளர் - சுனில் கேஸ்
இசையமைப்பாளர் - ஜேக்ஸ் பிஜாய்.
எடிட்டர் - ஷமீர் கேஎம்
புரடக்ஷன் டிசைனர் - வினேஷ் பங்கலான்
பப்ளிசிட்டி டிசைனர் - டியூனி ஜான்.
நடிகர், நடிகைகள் யாரும் விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.