நடிகர் மோகன்லாலின் விருஷபா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோகன் லால் - இயக்குநர் நந்தா கிஷோர் ஆகியோரது கூட்டணியில் வரலாற்று கதைகளத்துடன் “விருஷபா” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
மலையாளம், தெலுங்கு மொழிகளில் படம்பிடிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், நடிகர் மோகன் லால் அரசனாக நடித்துள்ளார்.
நடிகர்கள் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்படம், வரும் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிச.25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இது குறித்து நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
சில கதைகள் திரைப்படத்தைத் தாண்டியவை, அவை மரபுவழியில் வந்தவை. இந்த கிறிஸ்துமஸுக்கு விருஷ்பாவின் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்திருப்பதைக் காணலாம்.
இந்தப் படம் உணர்ச்சி, பிரம்மாண்டம், விதியினை கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
உலகம் முழுவதும் வரும் டிச.25ஆம் தேதி வெளியாகிறது எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் நந்தா கிஷோர் ஐந்தாண்டுகளாக எழுதி வந்ததாகக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.