ராஜமௌலி படத்தில் வில்லனாக பிருத்விராஜ்..! அறிமுக போஸ்டருடன் நெகிழ்ச்சி!
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பகிர்ந்த போஸ்டர் குறித்து...
பிரபல தெலுங்கு பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நடிகர் பிருத்விராஜின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
மகேஷ் பாபு உடனான அவரது படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ராஜமௌலி தனது பதிவில் கூறியதாவது:
பிருத்வியுடனான முதல் ஷாட்டினை எடுத்த பிறகு அவரிடம் சென்று, நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் நீங்கள்தான் எனக் கூறினேன்.
கும்பா எனப்படும் அதிகாரமிக்க, கருணையற்ற, கொடூரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ளார். மிகவும் திருப்தியான உணர்வு.
இந்தப் படத்தில் இணைந்ததுக்கு நன்றி பிருத்விராஜ் எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.