இரைச்சலில் இருந்து தப்பிக்கவே துபை சென்றேன் - நடிகர் அஜித் விளக்கம்!
துபைக்கு சென்றது ஏன்? என்பது குறித்து அஜித் குமார் விளக்கம்
நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் துபை சென்றது குறித்து விளக்கமளித்துள்ளார்.
நீண்ட காலம் கழித்து, சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நேர்காணலை அளித்தார்.
பேட்டியில் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்தாண்டில் திரைப்படங்களில் இருந்து ஓய்வுபெற்றேன். அந்தக் காரணத்துக்காகத்தான் துபைக்குச் சென்றேன்.
Advertisement
Advertisement
ஏனெனில், அனைத்து விதமான இரைச்சல்களிலிருந்தும் விலகிக் கொள்ள விரும்புகிறேன். மேலும், கவன ஈர்ப்பிலிருந்து தப்பிக்கவும், எனக்கு உத்வேகம் அளிக்கும் நான் கவனம் செலுத்தவும்தான்.
பெரும்பாலான முக்கிய சுற்றுகள், இங்கு அமைந்திருப்பதால் இங்கு (துபை) வந்துள்ளேன். அது எனக்கு உதவியாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ராஜமௌலி படத்தில் வில்லனாக பிருத்விராஜ்..! அறிமுக போஸ்டருடன் நெகிழ்ச்சி!
Wanted to escape noise: Actor Ajith Kumar says Dubai life keeps him focused
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.