நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கில் மார்பிங் புகைப்படங்கள் பகிர்ந்து வந்தது 20 வயது இளம்பெண்தான் என விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட பதிவில், ``சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னைப் பற்றியும், என் குடும்பத்தினர் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களைப் பற்றியும் மிகவும் பொருத்தமற்ற மற்றும் தவறான உள்ளடக்கத்தைப் பரப்புவதாகவும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை டேக் (Tag) செய்வதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த போலி இன்ஸ்டா பக்கத்தில் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதுபோன்ற இலக்கு வைக்கப்பட்ட இணையவழியிலான துன்புறுத்தல்கள் மிகவும் வேதனையாக உள்ளது.
மேலும், இதுகுறித்த விசாரணையில், வெறுப்பைப் பரப்பும் ஒரே நோக்கத்துடன் ஒரே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, என்னைப் பற்றிய ஒவ்வொரு பதிவிலும் தவறான மற்றும் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தைப் பதிவிட்டு கருத்து தெரிவித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்ததும், உடனடியாக கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். அவர்களின் விரைவான விசாரணை மற்றும் உதவியுடன், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நபர் அடையாளம் காணப்பட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர் 20 வயது இளம்பெண் என்றும், அவரது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவரது பெயர் அல்லது விவரத்தை அனுபமா வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், அனுபமா பெயரில் போலியான மார்பிங் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கடைசியா ஒரு டான்ஸ்! வருத்தமடைந்த விஜய் ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.