நடிகர் அபினவ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபிநய். தொடர்ந்து, ஜங்ஷன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன்பின், நாயகனின் நண்பனாக, முக்கிய கதாபாத்திரங்களில் என சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
இறுதியாக, என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாகக் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் நலப் பிரச்னைகளையும் சந்தித்து வந்தார். இதற்காக, சிலர் அபிநய்க்கு பொருளாதார உதவிகளையும் செய்து வந்தனர்.
அழகான நாயகனாக இருந்து உடல்நலம் சீரழிந்து ஆளே அடையாளம் தெரியாத நிலையில் இவரை ரசிகர்கள் பார்த்தபோது வேதனையாக இருப்பதாக வருத்தப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சையிலிருந்த அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார். நல்ல நடிகராக வந்திருக்க வேண்டியவர் 44-வயதில் உயிரிழந்தது திரைத்துறையினரிடமும் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.