செய்திகள்

ஜேசன் சஞ்சய் படத்தின் பெயர் அறிவிப்பு!

ஜேசன் சஞ்சய் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, தமன் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் கதையின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் பெயர் ’சிக்மா’ என்று படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jason Sanjay movie title announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அரசு மருத்துவா்கள்

தென்கொரியா முன்னாள் அதிபா் மனைவிக்கு ஊழல் வழக்கில் 20 மாத சிறை தண்டனை

‘இப்போது தோ்தல் நடத்துவது தவறு’

அஜீத் பவாா் - ஆறு முறை துணை முதல்வா்

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி-யின் பணியிடை நீக்கம் ரத்து

SCROLL FOR NEXT