முகப்பு
செய்திகள்

நாளை (மே. 18) சேயோன் படப்பிடிப்பு!

சேயோன் படப்பிடிப்பு குறித்து...

நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன்
பகிர்:

சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் அறிமுக புரோமோ வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

இப்படம் விருமாண்டி திரைப்படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்சன் குடும்பப் படமாக உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (மே. 18) துவங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

An official announcement has been made regarding the filming of the movie Seyon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.