நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது.
இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தப் படம் நவ.28 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் கதைநாயகியாக ரகு தாத்தா படத்தில் சரிவைக் கண்டதால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.
இதையும் படிக்க: டியூட் ஓடிடி தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.