பிக் பாஸ் வீடு இரண்டு சாம்ராஜ்யமாக பிரிக்கப்பட்டு இந்த வார டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்துள்ளது. கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறிய துஷார், பிரவீன் உள்பட இதுவரை 7 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரம் வீட்டின் கேப்டனாக சபரி தேர்வாகியிருக்கும் நிலையில், வியானா, விக்ரம், சுபிக்ஷா, சாண்ட்ரா, ரம்யா, பார்வதி, கனி, திவாகர், திவ்யா மற்றும் அரோரா போட்டியில் இருந்து வெளியேறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களை கானா சாம்ராஜ்யம் மற்றும் தர்பீஸ் சாம்ராஜ்யம் என இரண்டு அணிகளாகப் பிரித்து டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
கானா சாம்ராஜ்யத்தின் அரசராக கானா வினோத்தும், தர்பீஸ் சாம்ராஜ்யத்தின் அரசராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரும் உள்ளனர்.
திவ்யா, கம்ருதீன், கெமி, விக்ரம், பிரஜன், அமித், ரம்யா ஜோ உள்ளிட்டோர் கானா சாம்ராஜ்யத்திலும், வியானா, கனி, சபரி, எஃப்ஜே, சுபிக்ஷா, அரோரா, பார்வதி உள்ளிட்டோர் தர்பீஸ் சாம்ராஜ்யத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பான முதல் ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பார்வதி, கம்ருதீன் மற்றும் விக்ரம் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.