பாலிவுட் நடிகர் ஷாருக்கான்  insta/shah rukh khan
செய்திகள்

துபையில் ஷாருக்கான் பெயரில் கட்டப்படும் பிரமாண்ட கட்டடம்!

துபையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயரில் மாபெரும் கட்டடம் கட்டப்படுவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

துபையில் கட்டப்படும் பிரமாண்ட வணிகக் கட்டடத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபையின், ஷேக் சயீத் சாலையில் கட்டப்படவுள்ள மாபெரும் வணிகக் கட்டடத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயர் சூட்டப்படும் என துபையைச் சேர்ந்த டானூப் குழு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஷாருக்ஸ் எனப் பெயர் சூட்டப்படவுள்ள இந்தக் கட்டடம் சுமார் 56 தளங்களைக் கொண்டிருக்கும் எனவும், இதன் கட்டுமானப் பணிகள் வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், இந்தக் கட்டடத்தின் நுழைவாயிலில் நடிகர் ஷாருக்கானின் பிரபல போஸில் அவரது சிலை ஒன்றை வைப்பதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது பெயர் துபையின் முக்கிய பகுதியாக உருவாகவுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக, நடிகர் ஷாருக்கான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

“துபை நகரத்தின் முக்கிய பகுதியாக அமையப்போகும் ஒரு கட்டடத்திற்கு எனது பெயர் சூட்டப்படும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கனவுகள், வாய்ப்புகள் அனைத்தும் கொண்டாடப்படும் துபை எனக்கு என்றும் சிறந்த இடமாகும்.

நம்பிக்கையும் கடின உழைப்பும் உங்களை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும் என்பதற்கு ஒரு சின்னமாக டானூப் நிறுவனத்தின் ஷாருக்ஸ் கட்டடம் இருக்கும்” என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மகேஷ் பாபு - ராஜமௌலி படப் பெயர் அறிவிப்பு!

It has been announced that a grand commercial building being built in Dubai will be named after famous Bollywood actor Shah Rukh Khan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கி ஊழியா் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

காா் மீது ஆட்டோ மோதி ஓட்டுநா் மரணம்

நெல் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் வேதனை

ரூ.100 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி: பெண் உள்பட இருவா் கைது

ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT