பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தரையில் அமர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
வார இறுதி நாளான இன்றும் (நவ. 16) திவாகரின் செயல்கள் குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதிக்கு உரிய பதில்களை அவர் கொடுக்காததால், தரையில் அமர்ந்துகொண்டார்.
நாள் முழுவதும் நின்றுகொண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால், பதில்கள் வரும் வரை தரையில் அமர்ந்துகொள்கிறேன் எனக் குறிப்பிட்டு அமர்ந்துகொண்ட விடியோ முன்னோட்டமாக வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. 5 வது வாரத்தின் மத்தியில் மன்னர் காலத்து கதாபாத்திரங்கள் டாஸ்க்காக கொடுக்கப்பட்டது.
தர்பீஸ் ராஜ்ஜியம் - கானா ராஜ்ஜியம் என போட்டியாளர்கள் இரு நாட்டு பிரஜைகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் தர்பீஸ் ராஜ்ஜியத்தின் மன்னராகப் பொறுப்பேற்ற திவாகர், சரியாகச் செயல்படாததால் அமைச்சராக மாற்றப்பட்டு விஜே பார்வதி ராணியானார். அமைச்சராக இருந்தபோதும் விமர்சனங்க்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு ஆத்திரமடைந்து அமைச்சர் வேடம் வேண்டாம் எனக் கூறி ஆட்டத்திலிருந்து திவாகர் வெளியேறினார்.
இது குறித்து வார இறுதியில் கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, வாரம் முழுக்க பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்ய முடியவில்லை, ஆனால், ரீல்ஸ் செய்வதற்காக எல்லா கேமராக்களுக்கு முன்பும் செல்ல மட்டும் தெரிகிறதா? என விஜய் சேதுபதி கூறினார்.
இதற்கு பதில் அளிக்காமல் திவாகர் மெளனம் காத்ததால், விஜய் சேதுபதி பதில் கிடைக்கும் வரை கீழே அமர்ந்துகொள்கிறேன் எனக் குறிப்பிட்டு மேடையிலேயே கீழே அமர்ந்துகொண்டார்.
திவாகர் இந்த வார்த்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவரின் செயல்கள் குறித்து விஜய் சேதுபதி கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க |பிக் பாஸ் 9: திவாகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.