பிகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
பிகாரில் மிகவும் பிரபலமான நாட்டுப்புறப் பாடகியான மைதிலி தாக்குர், கடந்த அக். 14 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அதன்பின்னர், அவருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
நடந்த முடிந்த தேர்தலில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான 25 வயதான பாடகி மைதிலி தாக்குர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பினோத் மிஷ்ராவைவிட 11,730 வாக்குகள் அதிகமாகப் பெற்று தனது அரசியல் வாழ்க்கையில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மிக இளவயதில் அதுவும் ஒரு கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்திற்குள் மைதிலி எம்எல்ஏ ஆனது பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மைதலி தாக்குர் யார் என சமூக வலைதளங்களில் பலரும் தேடியபோது சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘கண்ணான கண்ணே’ பாடலை மைதிலி பாடியிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தொடர் வெற்றியைப் பெற்ற பிரணவ் மோகன்லால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.