பாலிவுட் இயக்குநர் நீரஜ் கவான் இந்தியாவில் இருக்கும் சாதிய கொடுமைகள் பற்றி ஹாலிவுட் இயக்குநர் ஸ்கார்செஸி உடனான நேர்காணலில் பேசியுள்ளார்.
பிறப்பினாலே வைரஸ் தாக்கப்பட்டவர்களாக தலித் மக்கள் இந்தியாவின் கஷ்டத்தை அனுபவிப்பதாகக் கூறியுள்ளார்.
நீரஜ் கவான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹோம்பவுண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக இந்தப் படம் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பிரபல ஹாலிவுட் லெஜெண்டரி இயக்குநர் மார்டின் ஸ்கார்செஸி இந்தியாவில் இருக்கும் சாதிகள் குறித்து பேசுமாறு கேட்டபோது நீரஜ் கவான் பேசியதாவது:
நான் சிறிய வயதில் உயர்சாதி மனிதர்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எங்களுடைய பெயருக்குப் பின்னால் இருக்கும் பெயரினை வைத்தே சாதியை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதால் நான் சிறிய வயதில் அதைப் பயன்படுத்த தயங்கி இருக்கிறேன்.
2019-இல் சமூக இடைவெளி என வந்தது அல்லவா? அதுபோல் நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கிறோம். காரணம் பிறப்பு மட்டுமே.
குறிப்பிட்ட இந்தச் சாதியில் பிறந்தால் எங்களுக்கு வைரஸ் வந்துவிடும். யாருடனும் சமமாக இருக்க முடியாது. பொது இடங்களில் பங்கேற்க முடியாது.
எங்களைப் போலவே அந்த வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். இதுபோல ஒரு மாயையை இந்தியாவில் உருவாக்கியுள்ளார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.