ஜனநாயகன், ஜெயிலர் -2, ராஜா சாப் - போஸ்டர்கள் படம் - எக்ஸ்
செய்திகள்

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள திரைப்படங்களின் பட்டியல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

2026 ஆம் ஆண்டை இலக்காக வைத்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சன்னி தியோல் முதல் தளபதி விஜய் வரையிலான நடிகர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

வசூல் பாதிக்காத வகையில், இப்படங்களை அடுத்த ஆண்டு வெவ்வேறு மாதங்களில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் முதன்மையிடத்தில் இருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம். ஜனவரி 9, 2026-ல் இப்படம் வெளியாகவுள்ளது. விஜய் உடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் -2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் இயக்கிவரும் இப்படம் 2026 ஜூன் 12ஆம் தேதி வெளியாகிறது.

தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஃபெளஜி படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனுபம் கேர், மிதுன் சர்க்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15, 2026-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படம் 2026 மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. கியரா அத்வானி நாயகியாக நடிக்கும் இப்பத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார்.

ராம் சரண் - ஜான்வி கபூர் முதல்முறையாக இணைந்து நடிக்கும் பெத்தி திரைப்படம் 2026 மார்ச் 17 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சிவராஜ் குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை புஜ்ஜி பாபு இயக்குகிறார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிவரும் திரிஷ்யம் -3 திரைப்படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மோகன் லால், சித்திக், எஸ்தன் அனில் நடித்துள்ள இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்னி தியோல் நாயகனாக நடிக்கும் பார்டர் -2 திரைப்படமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தில் வருண் தவான், அஹான் ஷெட்டி, தில்ஜித் தோசன்ஜ் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கிவரும் புதிய படமும் 2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ளது. தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா சாப் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரன்பிர் கபூர் - சாய்பல்லவி ஜோடியாக நடிக்கும் ராமாயணம் படமும் 2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. நிதீஷ் திவாரி இயக்கிவரும் இப்படம் தீபாவளியையொட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. யஷ், சன்னி தியோல், அருண் கோயல் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | மோகன்லால் மகள் நாயகியாகும் படத்தின் அப்டேட்!

jailer 2 To jananayakan 10 Most Awaited Films Of 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்: பாஜக, ஆம் ஆத்மி போட்டிப் பிரசாரம்

பிளவக்கல் அணையிலிருந்து சாகுபடிக்காக தண்ணீா் திறப்பு

பழங்குடியின மக்களுக்குப் புத்தாடைகள் அளிப்பு

சாஸ்தாகோவில் அணையிலிருந்து நீா் திறப்பு

SCROLL FOR NEXT