எஸ். எஸ். ராஜமௌலி 
செய்திகள்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கடவுள் நம்பிக்கை குறித்து பேசியுள்ளார்...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் இந்தியாவின் முதல் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக வாரணாசி உருவாகி வருகிறது. இதில், கதை நாயகனாக மகேஷ் பாபுவும் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லனாக பிருத்விராஜ்-ம் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பெயர் டீசர் அண்மையில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், டீசர் வெளியீட்டு நிகழ்வில் எஸ். எஸ். ராஜமௌலி பேசியது சர்ச்சையையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

பெயர் டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமௌலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அப்பா எப்போதும் நான் அனுமனால் ஆசிர்வதிக்கப்பட்டு வருவதாகக் கூறுவார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்கு கடுமையாக கோபம் வந்தது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவானா? என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு இதைச் சரிசெய்வானா?” என்றார்.

வாரணாசி எங்கிற பெயரில் ராமாயணக் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் டீசர் நிகழ்வில் ராஜமௌலி இப்படி பேசியது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

director ss rajamouli said he have no faith in god

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை மோசடியில் ரூ.3.38 லட்சத்தை இழந்த பெண்: இருவர் கைது!

கறுப்பும் சிவப்பும்... ஸ்ரீமுகி!

இருளின் நிலவே... ஷில்பா ஷெட்டி!

தொடர்ந்து 6வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

பட்டர் ரோஸ்... ஜனனி!

SCROLL FOR NEXT