பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை பவித்ரா ஜனனி புதிய இணையத் தொடரில் நடித்துள்ளார்.
தினகரன் எம். எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு ரேகை எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரேகை இணையத் தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி ஆகியோர் காவல் துறை அதிகாரிகளாக நடித்துள்ளனர்.
மேலும் முக்கிய பாத்திரங்களில் போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீராம், அஞ்சலி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடரை எஸ்.எஸ். குரூப் புரொடக்ஷன் சார்பில் எஸ்.சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.
7 எபிசோடுகள் கொண்ட ரேகை இணையத் தொடர், வரும் நவம்பர் 28 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்து பிரபலமான பவித்ரா ஜனனி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அடிக்கடி ஆன்மிக பயணம் மேற்கொண்டுவந்த பவித்ரா, தற்போது ரேகை இணையத் தொடரில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: 1000 நாள்களைக் கடந்த பிரபல தொடர்! குவியும் வாழ்த்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.