ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்திற்குப் பின் நடித்துள்ள திரைப்படம் டீசல். ஆக்சன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும், நடிகர்கள் வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். டீசல் திரைப்படம் தீபாவளியையொட்டி வரும் அக். 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தீபாவளி வெளியீடாக பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ்வின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இதில், டியூட் மற்றும் பைசன் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான வெற்றியைப் பெற்றன. ஆனால், டீசல் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இந்த நிலையில், டீசல் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வரும் நவ. 21 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலக அரங்கில் இந்திய சினிமா... ரன்வீர் சிங் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.