சின்மயி குரலில்! சசி குமாரின் மை லார்ட் படத்தின் முதல் பாடல்!
‘மை லார்ட்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது...
நடிகர் சசி குமாரின் “மை லார்ட்” எனும் புதிய திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசி குமார் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மை லார்ட்”. இப்படத்தை, ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் “எச காத்தா” எனும் முதல் பாடலை படக்குழுவினர் இன்று (நவ. 19) வெளியிட்டுள்ளனர்.
பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை, பாடகி சின்மயி ஸ்ரீபதா மற்றும் பாடகர் சத்யபிரகாஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இதையும் படிக்க: ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
The first song from actor Sasi Kumar's new movie "My Lord" has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.