சசிகுமார் - சூர்யா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள நடுசென்டர் இணையத் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தியும் மாணவர்களிடையே பரவும் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பதை பிரதானப்படுத்தியும் நடுசென்டர் இணையத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத் தொடரில் சசிகுமார் (பயிற்சியாளராக), கலையரசன், ஆஷா சரத், ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் சூர்யா எஸ்.கே., சூர்யா விஜய் சேதுபதி, முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆர்த்தி, கிஷோர், சாரா பிளாக், டெர்ரென்ஸ், சிவம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நரு நாராயணன் இயக்கியுள்ள இந்த இணையத் தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஹெஸ்டின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
நடுசென்டர் இணையத் தொடர் மொத்தம் 17 எபிசோடுகள் கொண்டதாக உருவாகியுள்ள நிலையில், முதல் 3 எபிசோடுகள் இன்று(நவ. 20) வெளியாகியுள்ளது.
மீதமுள்ள எபிசோடுகள் வாரவாரம் வியாழக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: காலேஜ் கட் அடித்துவிட்டு படம் பார்க்க வேண்டாம்: கவின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.