இயக்குநர் ராஜமௌலியின் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கும் என இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று (நவ. 21) பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் கீரவாணி கூறியதாவது:
“ரசிகர்கள் பிரமாண்டத்தை எதிர்பார்க்கலாம். வாரணாசி திரைப்படத்தில் இசை மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. எனக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. நீங்கள் செய்யும் பணியில் தெளிவும் உறுதியும் இருந்தால் உங்களுக்கு அழுத்தமே இருக்காது” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் பட டைட்டில் டீசர்! ரஜினிகாந்த் வெளியிட்டார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.