ஹரிஷ் கல்யாண் 
செய்திகள்

ஹரிஷ் கல்யாணின் புதிய படப்பெயர்!

ராப் இசைக்கலைஞராக நடித்த ஹரிஷ் கல்யாண்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படத்திற்கு “தாஷமக்கான்” எனப் பெயரிட்டுள்ளனர்.

லிஃப்ட் படத்தின் இயக்குநரான வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, இப்படத்தின் பெயர் புரமோ மற்றும் முதல் தோற்றப் போஸ்டரை வெளியிட்டுள்னர்.

ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தாஷமக்கான் படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் வெளுத்து வாங்கும் கனமழை! மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

பொன்னிற வேளை... பாவனா!

ஸ்பிரிட் பட பூஜையில் சிரஞ்சீவி..! பிரபாஸ் பங்கேற்காதது ஏன்?

விமான டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தாலும் பணம் திரும்பக் கிடைக்கும்! விரைவில்

சன்டே மோட்டிவேஷன்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT