ஸ்பிரிட் பட பூஜையில் சிரஞ்சீவி..! பிரபாஸ் பங்கேற்காதது ஏன்?
சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் பூஜை குறித்து...
சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் பூஜையில் மெகாஸ்டார் சிரஞ்சீவி பங்கேற்று வாழ்த்தினார்.
நடிகர் பிரபாஸை வைத்து இயக்குநர் சந்தீப் வங்கா, இந்தப் படத்தை இயக்குகிறார்.
இயக்குநர் சந்தீப் வங்கா அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
Advertisement
Advertisement
தற்போது, டி சீரிஸ் உடன் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ஸ்பிரிட் படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தின் பூஜையில் நடிகை த்ரிப்தி டிம்ரி உடன் மெகாஸ்டார் சிரஞ்சீவியும் பங்குபெற்றார்.
இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் பிரபாஸ் கலந்துகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தில் அவரது புதிய தோற்றம் வெளிப்படக்கூடாது என்பதற்காகவா அல்லது வேறு வேலை காரணமா என்பது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், சந்தீப் தனது இன்ஸ்டா பக்கத்தில், பிரபாஸின் முகம் இல்லாத (கைகள் மட்டுமே கொண்ட) புகைப்படத்தைப் பதிவிட்டு பதிலளித்துள்ளார்.