இறுதிக்கட்டத்தில் துல்கர் - 41 படப்பிடிப்பு!
துல்கர் - 41 படப்பிடிப்பு குறித்து...
நடிகர் துல்கர் சல்மானின் 41-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தற்போது, மலையாளத்தில் ஐயம் கேம் என்கிற படத்திலும் இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
தொடர்ந்து, துல்கர் சல்மான் தன் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டம் அடுத்ததாகத் தொடங்குகிறது.
Advertisement
Advertisement
இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.