நடிகர் ஜெய் நடிக்கும் புதிய திரைப்படம்!
நடிகர் ஜெய்யின் புதிய திரைப்படம் தொடக்கம்....
நடிகர் ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வந்திருக்க வேண்டியவர் ஜெய். சுப்ரமணியபுரம் திரைப்படம் பெரிய வெளிச்சத்தைக் கொடுக்க அடுத்தடுத்து சில வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.
ஆனால், கதைகள் சரியாக அமையாததால் மெல்ல மெல்ல தன் வணிகத்தை இழந்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் தவெக கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரங்களையும் மேற்கொண்டார். இதில், ஜெய்க்கு முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் ஜெய் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக டெல்னா டேவிஸ் நடிக்க, அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது.
Filming for the new movie starring actor Jai has commenced with a pooja.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.