முகப்பு

தனுஷ் - 56 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

தனுஷ் 56 படப்பிடிப்பு குறித்து....

18 வினாடிகள் முன்பு
தனுஷ் - 56 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
நடிகர்கள் தனுஷ், எஸ்ஜே சூர்யா, வடிவேலு
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது 56-வது திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார். நிகழ்வில் நடிகர்கள் வடிவேலு, எஸ். ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் சில நாள்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. இங்கு, ஆக்‌ஷன் காட்சிகள் உள்பட படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.