ஆச்சரியப்படுத்தும் தனுஷின் ஓ.ம் வசூல்! எவ்வளவு?
ஓ.ம் திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது...

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் திரைப்படம் மூன்று நாள்களில் பெரிய தொகையை வசூலித்துள்ளது.
நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ஓ.ம் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் வணிக ரீதியாக அடுத்தடுத்த நாள்களில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
செம்மரக் கடத்தல் கும்பலைத் தடுக்கும் கதையாக உருவான இதில் நடிகர் மம்மூட்டி ரெட் ஹில்ஸ் கார்த்திகேயன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலம் கழித்து மம்மூட்டி நடித்த தமிழ்ப்படம் என்பதைத் தாண்டி ஓ.மில் அறிமுகப் பாடலான அலேக்கா லோவா பாடலில் நடிகர் மம்மூட்டி நடந்து வருவதும் சில நடன அசைவுகளைக் கொடுப்பதும் மலையாள ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஓ.ம் திரைப்படம் மூன்று நாள் வசூலாக உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவாக, இந்த வசூலைச் செய்த தனுஷ் திரைப்படமாகவும் இது மாறியுள்ளது.