முகப்பு

தனுஷ் படங்களிலேயே முதலிடம்... தெலுங்கில் வசூல் சாதனை படைத்த ஓ.ம்!

தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் படத்தின் வசூல் குறித்து...

29 வினாடிகள் முன்பு
தனுஷ் படங்களிலேயே முதலிடம்... தெலுங்கில் வசூல் சாதனை படைத்த ஓ.ம்!
ஓ.ம் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்
பகிர்:

தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் படத்தின் முதல்நாள் வசூல் இந்திய அளவில் ரூ.10 கோடி எனக் கூறப்படுகிறது. அதிலும் தெலுங்கில் தனுஷ் படங்களில் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இன்று (நவ.20) உலகம் முழுவதும் வெளியான ஓ.ம் படத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. இருப்பினும் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

தெலுங்கில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷின் படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

தெலுங்கில் ரூ.1.73 கோடியும் தமிழில் ரூ.6.43 கோடியும் ஹிந்தியில் ரூ.16 லட்சம் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக வெளியான தனுஷின் கர திரைப்படம் சுமாரா வரவேற்பையே பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.