நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சாண்டி நடிப்பில் சூப்பர் ஹீரோ என்கிற திரைப்படம் உருவாகவுள்ளது.
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இறுதியாக, ஷங்கரின் 2.0 திரைப்படமே சொல்லத்தகுந்த சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருந்தது.
மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸை வைத்து மின்னல் முரளி திரைப்படத்தை எடுத்து வெற்றிப்படமாக்கினர்.
இந்த நிலையில், தமிழில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சாண்டி நடிப்பில் சூப்பர் ஹீரோ என்கிற திரைப்படம் உருவாக உள்ளதைப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இப்படத்தை விக்னேஷ் வேணுகோபால் இயக்க ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இதன், படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது சூப்பர் ஹீரோ கதையாக இருக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: வேட்டுவம் படப்பிடிப்பு நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.