நடிகர் தர்மேந்திரா 
செய்திகள்

நடிகர் தர்மேந்திரா காலமானார்!

நடிகர் தர்மேந்திரா காலமானதாகத் தகவல்....

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் காலமானார்.

ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார்.

இதற்கிடையே, அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியதுடன் தர்மேந்திராவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்துள்ளார்.

மேலும், மும்பை காவல்துறை தர்மேந்திரா மறைந்துவிட்டார் என்றும் இறுதிச்சடங்குகளுக்கான பணிகள் துவங்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

கரண் ஜோஹர் பதிவு

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் நடிகர்கள் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் தர்மேந்திரா உடல் வைக்கப்பட்டுள்ள தகன இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.

89 வயதான தர்மேந்திரா திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்ததுடன் பல உயரிய விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

actor dharmendra passed away today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதாநாயகனாகும் நிவாஸ் கே பிரசன்னா! நாயகி இவரா?

தமிழர்களின் பாரம்பரியம் காப்போம்...

தொடர்மழையால் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்! மக்கள் அவதி!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உரிய நேரத்தில் உறங்க...!

தென்காசி பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்

SCROLL FOR NEXT