பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர்.
இதில், கனி திரு, விஜே பார்வதி, ப்ரஜின் ஆகியோர் ஆசிரியர்களாகவும், இசைக்கலைஞர் எப்.ஜே., பள்ளிப் பணியாளராகவும் வேடமேற்றுள்ளனர். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாக வேடமேற்று தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தைப்போன்றே இந்த வாரத்திற்கும் எஃப்.ஜே. கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களின் நண்பர்கள் அறிவுரை கூறும் விடியோ ஒளிபரப்பப்பட்டது. இதில், போட்டியாளர்கள் செய்யும் தவறு, எதனை திருத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை நண்பர்கள் விளக்கிப் பேசியிருந்தனர்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் 50 வது நாளையொட்டி போட்டியாளர்களுக்கு இந்த விடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனால் போட்டியின் தன்மை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மடைமாற்றம் செய்யும் வகையில் பிக் பாஸ் சார்பில் பள்ளி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிக் பாஸ் வீடு உண்டு உறைவிடப் பள்ளியாக மாறியுள்ளது.
இதில், போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். விஜே பார்வதி, கனி திரு, ப்ரஜின், அமித் பார்கவ் ஆகியோர் ஆசிரியர்களாக வேடமேற்றுள்ளனர்.
இதில், பள்ளி மாணவர்களாக போட்டியாளர்கள் செய்யும் கேலி, சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளவர்களும் தங்கள் பாணியில் மாணவர்களைக் கட்டுப்படுத்தி நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த டாஸ்க்காக இதனை மாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | உங்களுக்கு அதிக ரசிகர்கள்: பிக் பாஸ் போட்டியாளர்களைப் புகழ்ந்த கீர்த்தி சுரேஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.