ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகை கெளசல்யா நடிக்கிறார்.
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கெளசல்யா. இவர் தொடர்ந்து நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன் போன்ற வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கௌசல்யா தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் சின்ன திரையில் மனைவி, கண்டேன் சீதையை, அக்கா, அலைபாயுதே உள்ளிட்ட தொடர்களில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.
முன்னதாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை கெளசல்யா கார்த்திகை தீபம் தொடரில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இவரின் வருகையால் இந்தத் தொடரின் ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கார்த்திக் ராஜு, ஆர்த்திகா, ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடிக்கிறார். கார்த்திகை தீபம் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் கார்த்திகை தீபம் தொடர் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
பிரியமுடன் படத்தில் விஜய்-க்கு ஜோடியால நடிகை கெளசல்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.