இளையராஜா காப்புரிமை கொடுத்து விடுவார்: கங்கை அமரன்
இளையராஜாவின் பாடல்களுக்கு அனுமதி கோர வேண்டும் என்று கங்கை அமரன் அறிவுறுத்தல்
Updated On : 26 நவம்பர், 2025 at 3:08 PM
இளையராஜாவிடம் அனுமதி கேட்டாலே அவர் பாடல்களுக்கு காப்புரிமை கொடுத்து விடுவார் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் பாடல்களுக்கு காப்புரிமை தொடர்பாக கங்கை அமரன் கூறுகையில், ``எங்களின் பாடல்களை அப்படியே எடுத்துப் போடுகிறவர்கள் காப்பிரைட்ஸ் கொடுத்துதான் ஆகவேண்டும். ஆனால், எங்களிடம் அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்றுதான் இளையராஜா கூறுகிறார்.
Updated On : 26 நவம்பர், 2025 at 3:15 PM
`இந்தப் படத்தில் இந்தப் பாடலைக் கொடுத்ததற்காக இளையராஜாவுக்கு நன்றி’ என்று போட்டால் எல்லாம் சரியாகிவிடும். அவரிடம் கேட்டாலே அவர் கொடுத்து விடுவார்.
Advertisement
ஆனால், எங்களிடம் கேட்காமல் எடுத்துக் கொள்வதுதான் தவறு. நமக்குத் தேவை ஒரு `அனுமதி’. எங்களை மதிக்காமல், எடுத்துக் கொள்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
summary