இந்தாண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் அதிக லாபத்தை ஈட்டிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பான் இந்திய சினிமாக்களின் கை ஓங்க ஆரம்பித்ததிலிருந்து எந்த மொழியில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டாலும் அதனை பான் இந்திய வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரவே தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிடுகின்றன.
அப்படி, பல கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வணிக ரீதியாகக் கடும் நெருக்கடிகளைச் சந்தித்ததுடன் பெரிய தோல்விப் படமான கதைகளும் உண்டு.
ஆனால், இந்தாண்டில் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்ற திரைப்படங்களும் உண்டு.
முக்கியமாக, தமிழில் ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கன்னடத்தில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த சூ ஃப்ரம் சோ, ரூ. 30 கோடியில் உருவாகி ரூ. 320 கோடி ஈட்டிய மகாவதார் நரம்சிம்ஹா, மலையாளத்தில் ரூ. 35 கோடியில் எடுக்கப்பட்டு ரூ. 300 கோடி வசூலித்த லோகா, ஹிந்தியில் ரூ. 50 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ. 570 கோடி வசூலித்த சய்யாரா ஆகியவை அடங்கும்.
ஆனால், இப்படங்களை விட அதிக லாபம் ஈட்டிய ஒரு படம் இருக்கிறது. இயக்குநர் அங்கித் சாகியா இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் குஜராத்தி மொழியில் வெளியான ஆன்மீகத் திரைப்படமான லாலோ: கிருஷ்ண சதா சகாயதே (Laalo: Krishna Sada Sahaayate) ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இதுவரை ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
இப்படம் 150 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது சினிமா வல்லுநர்கள் மற்றும் திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவே இந்தாண்டின் பெரிய ஹிட்டாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிக்க: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 1 லட்சம் பேர்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.