கார்த்தி  
செய்திகள்

வா வாத்தியார் இரண்டாம் பாடல்!

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

’வா வாத்தியார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக க்ருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வா வாத்தியாரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்னும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம்.

ஏற்கனவே, ஓடிடி தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் இயக்குநருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட தேதிக்கு வாத்தியார் வருவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடலான ஆலப்பிக்கே உம்மாக் பாடல் வெளியாகியுள்ளது. கெளுத்தி எழுதிய இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-ஆவது முறையாக பிபிஎல் கோப்பை வென்ற பெர்த் ஸ்கார்சிஸ்!

யு19 உலகக் கோப்பை: ஜுவெல் ஆண்ட்ரூ அரைசதம்; மே.இ.தீவுகள் 226 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

"மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என் குடும்பம் : கானா வினோத் வீட்டில் கமருதீன் உருக்கம்!

கோவையில் சேற்றில் சிக்கிய காட்டு யானை 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

SCROLL FOR NEXT