காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் குறித்து இயக்குநர் சந்தீப் வங்கா மாஸ்டர்கிளாஸ் எனக் கூறியுள்ளார்.
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் நேற்று (அக்.2) உலகம் முழுவதும் வெளியானது.
பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
உருவாக்க ரீதியாக மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து மொழிகளிலும் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
முக்கியமாக, ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் உள்ளிட்டோர் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பிரபல இயக்குநர் சந்தீப் வங்கா இந்தப் படம் குறித்து கூறியதாவது:
காந்தாரா சேப்டர் 1 உண்மையான மாஸ்டர்பீஸ். இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று. சினிமாட்டிக் உடன் கூடிய இடி மின்னல் மழை, கரடுமுரடான, தெய்வீகம் மற்றும் அசைக்கமுடியாதது.
ரிஷப் ஷெட்டி தனியாளாக உருவாக்கி படத்தை தூக்கி நுறுத்தியுள்ளார். பின்னணி இசைக்காக அஜ்னீஷ்க்கு சிறப்பு பாராட்டுகள் எனக் கூறியுள்ளார்.
இதற்கு இயக்குநர் ரிஷப் ஷெட்டி , “நன்றி சகோதரா” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.